தேனி: மசாலா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

தேனி மாவட்டத்தில் உள்ள ஈஸ்டர்ன் மசாலா தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.
 | 

தேனி: மசாலா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

தேனி மாவட்டத்தில் உள்ள ஈஸ்டர்ன் மசாலா தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. 

தேனி மாவட்டம் கோடாங்கிப்பட்டி பகுதியில் ஈஸ்டர்ன் மசாலா நிறுவனத்திற்கு சொந்தமான மசாலா தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இங்கு இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 4 வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தீ விபத்து ஏற்பட்ட ஈஸ்டர்ன் தொழிற்சாலைக்கு நேரில் சென்று தீயணைப்பு பணிகளை துரிதப்படுத்தினார்.

தொழிற்சாலையின் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளது. 
Newstm.in 
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP