பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும்: சென்னை காவல்துறை ஆணையர்

வாக்கு இயந்திர பெட்டியை பாதுகாப்புடன் எடுத்து செல்ல சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக சென்னை சிந்தாரிப்பேட்டை சென்னை உயர் நிலைப்பள்ளியில் இன்று ஆய்வு மேற்கொண்ட, சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
 | 

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும்: சென்னை காவல்துறை ஆணையர்

வாக்கு இயந்திர பெட்டியை பாதுகாப்புடன் எடுத்து செல்ல சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை சிந்தாரிப்பேட்டை சென்னை உயர் நிலைப்பள்ளியில் இன்று சென்னை காவல்துறை ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.  அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கு காவல்துறையினர் சிறப்பான பாதுகாப்பு கொடுத்துள்ளனர். பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும். அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான சூழலில் உள்ள வாக்குச்சாவடிக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது’ என்றார்.

மேலும், வாக்கு இயந்திர பெட்டியை பாதுகாப்புடன் எடுத்து செல்ல சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்தார்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP