அரசு தனக்கு கீழ் உள்ள அமைப்புகளை தவறாக பயன்படுத்தக்கூடாது: டி.டி.வி.தினகரன்

சி.பி.ஐ உள்ளிட்ட அமைப்பின் சோதனையில் உள்நோக்கம் இருக்கலாம். ஆனால் அவர்களின் செயல்பாட்டை தடுக்க கூடாது என்றும் அரசு தனக்கு கீழ் உள்ள அமைப்புகளை தவறாக பயன்படுத்தக்கூடாது என்றும் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
 | 

அரசு தனக்கு கீழ் உள்ள அமைப்புகளை தவறாக பயன்படுத்தக்கூடாது: டி.டி.வி.தினகரன்

அரசு தனக்கு கீழ் உள்ள அமைப்புகளை தவறாக பயன்படுத்தக்கூடாது என அமமுக கட்சி துணை  பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். 

திருச்சியில் கடந்த 2 நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிடிவி.தினகரன், இன்று சத்திரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற அமமுக தகவல் தொழில் நுட்ப அணியின் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "காவல் துறை, சி.பி.ஐ உள்ளிட்ட அமைப்புகள் அரசாங்கத்தின் அங்கம்தான் என்றும், விசாரணைக்கு அழைத்தால் யாராக இருந்தாலும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறினார். 

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி நடத்திய போராட்டம் தமிழ்நாட்டிலும் நடந்து இருக்க வேண்டும் என்கிற கமலின் கருத்து அவரின் சொந்த கருத்தாக இருக்கலாம் என கூறிய தினகரன், இந்த கருத்து சரியானதாக தெரியவில்லை என குறிப்பிட்டார். தமிழ்நாடு  தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்தினர். பின்னர்,  தலைமைச் செயலாளர் மீது எந்த குற்றமும் இல்லை என்று அவர்களே  கூறினார்கள். எனவே  சோதனை நடத்துவதாலே குற்றவாளி என்றாகி விடாது என தெரிவித்தார்.

மேலும், சி.பி.ஐ உள்ளிட்ட அமைப்பின் சோதனையில்  உள்நோக்கம் இருக்கலாம். ஆனால் அவர்களின் செயல்பாட்டை தடுக்க கூடாது என்றும்  அதே நேரத்தில் அரசாங்கம் தங்களுக்கு கீழ் உள்ள அமைப்புகளை தவறாக பயன்படுத்த கூடாது என்றும் வலியுறுத்தினார்.

ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருப்பது குறித்து கேள்விக்கு, "அவருக்கு என்றால் ஒரு நியாயம், மற்றவர்களுக்கு என்றால் ஒரு நியாயம். குடும்பத்தின் பிடியிலிருந்து அ.தி.மு.க வை காப்பாற்றுவேன் என கூறும் அவருடைய நியாயத்தை மக்கள் பார்த்துக்கொள்வார்கள். நாடாளுமன்ற தேர்தலில் தேனி மக்கள் அவருக்கு பதிலடி கொடுப்பார்கள் என்றார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP