குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை

அத்திவரதர் குளத்திற்குள் வைக்கப்பட்டதை தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் கனமழை பெய்து வருகிறது.
 | 

குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை

அத்திவரதர் குளத்திற்குள் வைக்கப்பட்டதை தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் கனமழை பெய்து வருகிறது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அனந்தசரஸ் குளத்துக்குள் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார் அத்திவரதர்.

1979-ஆம் ஆண்டிற்கு பிறகு 2019-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி வரை சயன கோலத்திலும், ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நின்றகோலத்திலும் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்து, நேற்று இரவு அனந்தசரஸ் குளத்தில் சயன கோலத்தில் வைக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் கனமழை பெய்து வருகிறது. இதேபோன்று, 1979-ஆம் ஆண்டு அத்திவரதரை குளத்திற்குள் வைக்கும்போது மழை பெய்ததாக, பெருமாள் பக்தர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அப்போது, அத்திவரதர் குளத்திற்குள் வைக்கப்பட்ட பிறகு, மழை பெய்து குளம் நிரம்பியுள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர். அத்திவரதரே தன்னை தண்ணீரால் நிரப்பிகொள்வார் என்று பக்தியுடன் கூறி மகிழ்ந்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP