இடைத்தேர்தல் வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது: முதலமைச்சர்

அதிமுக 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிப்பது மகிழ்ச்சியளிப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 | 

இடைத்தேர்தல் வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது: முதலமைச்சர்

அதிமுக 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிப்பது மகிழ்ச்சியளிப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுகவின் வெற்றி உறுதியாகியுள்ளது. இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த முதலமைச்சருக்கு தொண்டர்கள் மேள, தாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர். 

தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர், தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கி வெற்றியை கொண்டாடினார். பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர், 2 தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை வகிப்பது மகிழச்சி அளிப்பதாகவும், இடைதேர்தல் வெற்றிக்காக பாடுபட்ட தொண்டர்களுக்கும், வாக்களர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். மேலும், இடைத்தேர்தல் வெற்றி அமைச்சர்கள், எம்.பி எம்.எல்.ஏக்கள் உழைப்பால் கிடைத்த வெற்றி என்றும், இது வராலாற்று சிறப்புமிக்கது எனவும் தெரிவித்தார். 

எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பொய்ப்பிரச்சாரம் செய்தனர். ஆனால் உண்மை நிலையை மக்கள் புரிந்த கொண்டுள்ளனர். இந்த வெற்றி உண்மைக்கு கிடைத்தது. நலத்திட்டங்களை வீடுதோறும் கொண்டு சேர்த்தற்கு கிடைத்தது என குறிப்பிட்டார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP