ஆட்சியை காப்பாற்றவே அதிமுக மத்திய அரசோடு இணக்கமாக செல்கிறது: டிடிவி தினகரன்

ஆட்சியை காப்பாற்றுவதற்காகவே அதிமுக மத்திய அரசோடு இணக்கமாக செல்வதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
 | 

ஆட்சியை காப்பாற்றவே அதிமுக மத்திய அரசோடு இணக்கமாக செல்கிறது: டிடிவி தினகரன்

ஆட்சியை காப்பாற்றுவதற்காகவே அதிமுக மத்திய அரசோடு இணக்கமாக செல்வதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். 

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " வேலூர், நாங்குநேரி இடைத்தேர்தல்களில் கட்சி பதிவு இல்லாததால் சின்னம் குளறுபடி ஏற்படும் என்பதால்  நிர்வாகிகளின் ஆலோசனைப்படி போட்டியிடவில்லை என்றும் உள்ளாட்சி தேர்தலுக்குள் தங்களது கட்சியை பதிவு செய்யும் பணிகள் முடிவடையும் என்பதால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோம் எனவும் தெரிவித்தார். 

பொதுமக்கள் மத்தியில் தாங்கள் தனிமைப்படுத்தபட்டதாக தவறான பிம்பத்தை ஏற்படுத்தும் வகையில் சில நிர்வாகிகளை அமைச்சர்கள் அழைத்து செல்வதாக குற்றம்சாட்டிய டிடிவி தினகரன், பிம்பத்தை முறியடித்து அமமுக  வெற்றி பெறும் என்றும் ஜனநாயக முறைப்படி வெல்வோம் என்றும் கூறினார்.

சூர்யாவின் கருத்து சரியானது என்றும், சூர்யாவின் கருத்தில் உடன்பாடு இல்லையெனில் அமைச்சர்கள் அவதூறாக பேசக்கூடாது என கூறினார்.  அதிமுக தனது ஆட்சியை காப்பற்றுவதற்காகவே மத்திய அரசோடு சுமூகமாக செல்வதாகவும், இதனால் தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை எதிர்க்க மறுப்பதாகவும் குற்றம்சாட்டினார். 

சசிகலா மீது மரியாதை வைத்திருப்பதாக கூறும் அமைச்சர்கள் ஏன் கர்நாடாகா சென்று அவரை சந்திக்கவில்லை என கேள்வி எழுப்பிய டிடிவி.தினகரன், அமமுக ஜனநாயகமான கட்சி என்றும் யார் வேண்டுமானாலும் பத்திரிக்கையாளர்களை சந்திக்கலாம் என்றும் கூறினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP