அ.தி.மு.க அணையும் விளக்கல்ல; ஐந்து வருட கியாரண்டியுடன் ஒளிரும் எல்.இ.டி! - தம்பிதுரை விளக்கம்

அ.தி.மு.க அணையும் விளக்கல்ல, ஐந்து வருட கியாரண்டியுடன் ஒளிரும் எல்.இ.டி. விளக்கு மேலும், பெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 குறைக்கப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது என அ.தி.மு.க எம்.பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
 | 

அ.தி.மு.க அணையும் விளக்கல்ல; ஐந்து வருட கியாரண்டியுடன் ஒளிரும் எல்.இ.டி! - தம்பிதுரை விளக்கம்

அ.தி.மு.க அணையும் விளக்கல்ல, ஐந்து வருட கியாரண்டியுடன்  ஒளிரும் எல்.இ.டி. விளக்கு என அ.தி.மு.க எம்.பி தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

'அ.தி.மு.க அணையப்போகும் விளக்கு' என தி.மு.க தலைவர் ஸ்டாடலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இதற்கு அ.தி.மு.க எம்.பி தம்பிதுரை இன்றுபதிலளித்தார். 

இன்று கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஸ்டாலின் கூறுவது போல் அ.தி.மு.க ஒன்றும் அணையும் தீபம் இல்லை. 5 ஆண்டுகள் உத்திரவாதத்துடன் சுடர்விடப்போகும் எல்.இ.டி பல்பு" என்றார். 

மேலும்,  பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றி பேசுகையில், "பெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 குறைக்கப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது. குறைந்தது ரூ.10 வரையாவது குறைத்திருக்க வேண்டும். கலால் வரி என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. மாநில அரசு நிதி பற்றாக்குறையில் செயல்பட்டு வருகிறது. ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு பிறகு ஒட்டுமொத்த நிதியும் மத்திய அரசின் கைக்குள் சென்று விட்டது.

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனை அணிகள் போட்டியிட்டாலும் அ.தி.மு.க.வுக்கு கவலையில்லை. 40 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்" என தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP