ஆடுகளையும் விட்டு வைக்காத தெலுங்கானா போலீசார்! 

செடிகளை சேதப்படுத்திய குற்றத்திற்காக, இரண்டு ஆடுகள் தெலுங்கானா போலீசாரால் கைது செய்யபட்டு அபராதத் தொகை விதிக்கப்பட்டது.
 | 

ஆடுகளையும் விட்டு வைக்காத தெலுங்கானா போலீசார்! 

செடிகளை சேதப்படுத்திய குற்றத்திற்காக, இரண்டு ஆடுகள் தெலுங்கானா போலீசாரால் கைது செய்யபட்டு அபராதத் தொகை விதிக்கப்பட்டது.

தெலுங்கானா மாவட்டத்தில் உள்ள, ஹுசுராபாத் நகரில், நாட்டின் பசுமை வளத்தை அதிகரிக்கும் திட்டதின் கீழ்  அரசுக்கு சொந்தமான இடத்தில், தன்னார்வு அமைப்பின் சார்பில்,  950 செடிகளில் நட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. 
இந்த தோட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்த 2 ஆடுகள், அங்கிருந்த 200 செடிகளை தின்றுவிட்டதாக,  போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த ஆட்டின் உரிமையாளர்கள் யார் என கண்டறிவதில் கோட்டை விட்ட போலீசார், செடிகளை மேய்ந்த ஆடுகளை பிடித்து, அவற்றிற்கு எதிராக வழக்கு பதிவு செய்து, அந்த ஆடுகளை கைது செய்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். 

என்ன கொடுமை சார் இது....ஆடுகளுக்கு தெரியுமா இது இன்னாருடைய செடியென்று? ஓசியில் தின்று, ஈஸியாக மாட்டிக் கொண்டன. பின்னர், ஆடுகளின் உரிமையாளர் அபராத தொகையான ரூ.1,000 செலுத்தி, ஆட்டுகளை ரிலீஸ் செய்து கொண்டு போனார். 
 
இதே போன்ற காரணத்தினால், 2017 - ல் உத்திர பிரதேச மாநிலத்தின், ஜலௌன் நகரில், கழுதைகள் மீது குற்றம் சாட்டப்பட்டு, 4 நான்கு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தன. 
2015 - ல் மஹாராஷ்டிர மாநிலத்தில், ஒரு கிளி தன்னை தகாத வார்த்தைகள் உபயோகித்து திட்டித் தீர்ப்பதாக ஒருவர் புகார் கொடுக்க, விசாரணையில், அந்தக் கிளிக்கு, சுற்றியிருப்போர் பேசி பேசி  இப்படிபேச பழக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP