அரசு கடமை தவறினாலும், ஆசிரியர்கள் தவறக்கூடாது: கமல்ஹாசன்

தமிழக அரசுக்கும் ஜாக்டோ ஜியோவுக்கும் இடையே சுமூக தீர்வு ஏற்படாமல் ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அரசு கடமை தவறினாலும், ஆசிரியர்கள் கடமை தவறக்கூடாது என கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
 | 

ஒருவாரத்திற்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வரும் ஜாக்டோ ஜியோ போராட்டம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால், தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ ஜியோ உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். முதல்வர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே பணிக்கு திரும்ப முடியும் என ஜாக்டோ ஜியோ தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இது குறித்து ட்விட்டரில், "கல்வியாளர்களை காப்பது அரசின் கடமை. கல்வியை காப்பது கல்வியாளர்களின் கடமை. அரசு கடமை தவறினாலும் ஆசிரியர் கடமை தவறலாகாது. தேர்வு நெருங்கும் வேளையில் நாளைய நம்பிக்கையாம் மாணவர்களின் கல்வியை காப்பது நமது கடமை. பேச்சு வார்த்தைகள் உரிமைக்காய் தொடருட்டும். கல்விச்சாலைகள் கடமைக்காய் திறக்கட்டும். எட்டு கோடித்தமிழர்களின் உணர்வுகளின் சார்பாய் இதுவே என் குரல்" என்று தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP