பெட்ரோல், டீசலுக்கான வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்!

பெட்ரோல், டீசலுக்கான வரியை மத்திய அரசு குறைத்துள்ள நிலையில், தமிழக அரசும் குறைக்க முன் வரவேண்டும், மாநில அரசு வாட் வரியை குறைத்தால் லிட்டருக்கு 5 ரூபாய் வரை குறைய வாய்ப்பு உள்ளது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
 | 

பெட்ரோல், டீசலுக்கான வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்!

பெட்ரோல், டீசலுக்கான வரியை மத்திய அரசு குறைத்துள்ள நிலையில், தமிழக அரசும் குறைக்க முன் வரவேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்து பேசினார். முன்னதாக, விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே வாய்நத்தம் கிராமத்தில் நலவாழ்வு மையத்தை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "மாநில அரசு வாட் வரியை குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை குறைய வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை குறைத்துள்ள நிலையில், தமிழக அரசும் குறைக்க முன் வரவேண்டும்" என்றார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP