பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்கக் கோரி தமிழக அரசு மேல்முறையீடு!

தமிழகத்தில் பட்டாசு வெடிப்பதற்கு கூடுதல் நேரம் ஒதுக்கக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுசூழல் பிரச்னைகளை கருத்தில் கொண்டு அதை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு, 'நாடு முழுவதும் பட்டாசு தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ, வெடிக்கவோ தடை இல்லை' என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 

பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்கக் கோரி தமிழக அரசு மேல்முறையீடு!

அதே நேரத்தில், நீதிபதிகள் பல்வேறு நிபந்தனைகளையும் முன்வைத்துள்ளனர். அதாவது,  'குறைவான புகையை வெளியிடும் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். ஆன்லைனில் பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது. விதிமுறைகளை மீறி பட்டாசு விற்பனை செய்வோருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்' உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இத்துடன் முக்கியமாக, தீபாவளி தினத்தன்று இரவு 8 மணி முதல் 10 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினத்தன்று இரவு 11.55  மணி முதல் 12.30 மணி வரை மட்டுமே வெடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 

தொடர்ந்து இந்த உத்தரவுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது. விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP