Logo

துணை நடிகை சந்தியா... அவிழ்க்கப்படாத முடிச்சுகள்...

தமிழகத்தை உறைய வைத்த துணை நடிகை சந்தியா கொலை வழக்கில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் அவருடைய உடல் பாகங்கள் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
 | 

துணை நடிகை சந்தியா... அவிழ்க்கப்படாத முடிச்சுகள்...

தமிழகத்தை உறைய வைத்த துணை நடிகை சந்தியா கொலை வழக்கில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் அவருடைய உடல் பாகங்கள் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

கொலை செய்யப்பட்ட பெண், தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியா என்பது தெரிய வந்தது. அவரை கொலை செய்ததாக சந்தியாவின் கணவர் எஸ்.ஆர்.பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். இவர் கடந்த 2005-ம் ஆண்டு காதல் இலவசம் என்ற தமிழ் திரைப்படத்தை தயாரித்து இயக்கி வெளியிட்டவர்.
கொலை செய்யப்பட்ட சந்தியா குறித்து பின்னணி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

 யார் இந்த சந்தியா

துணை நடிகை சந்தியா... அவிழ்க்கப்படாத முடிச்சுகள்...

இவரது பிறந்த ஊர், கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ஞாலம் ஆகும்.
சந்தியாவுக்கு, உதயன் என்ற அண்ணனும், சஜிதா என்ற தங்கையும் உள்ளனர். அண்ணன் கேரளாவில் டைல்ஸ் ஒட்டும் வேலைக்கு சென்று வருகிறார். சஜிதா திருமணம் ஆகி தென்தாமரைகுளம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சந்தியாவின் பெற்றோர் ஞாலத்தில் ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகிறார்கள்.

சந்தியா அனைவரிடமும் சகஜமாக பேசக்கூடியவர். பாலகிருஷ்ணன் சில ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி நகர பாமக செயலாளராக பொறுப்பு வகித்தார். பாலகிருஷ்ணனின் மனைவி என்ற வகையில் சந்தியாவுக்கும் அரசியல் தொடர்புகள் கிடைத்தன.பாலகிருஷ்ணன் அரசியலை விட்டு சினிமாவுக்கு வந்த பிறகும் சந்தியாவின் அரசியல் தொடர்புகள் தொடர்ந்தன.

அரசியலில் சந்தியா

துணை நடிகை சந்தியா... அவிழ்க்கப்படாத முடிச்சுகள்...

கடந்த 2011 உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி நகராட்சி கவுன்சிலர் தேர்தலில் சந்தியா சுயேட்சையாக போட்டியிட்டார். அதிலிருந்து அவரது நடவடிக்கைகளில் அதிக மாற்றம் ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள். அந்தத் தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். எனினும் அரசியல் தொடர்புகள் நீடித்து வந்ததாகவே கூறப்படுகிறது. பின்னர் சினிமாவில் நடிக்கும் ஆசையுடன் சென்னை வந்து சேர்ந்தார். இதற்கிடையே தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சந்தியா.

அதன்பிறகும் பாலகிருஷணனும், சந்தியாவும் ஒன்றாக வாழ முயற்சித்தார்கள். சென்னைக்கு வந்து சேர்ந்த பிறகு, சந்தியா சினிமா ஆசை காரணமாக அவ்வப்போது வெளியே செல்வதும், அதை பாலகிருஷ்ணன் தடுப்பதும் தொடர் கதையாக இருந்து வந்துள்ளது. இந்தப் பின்னணியில்தான் சந்தியாவின் கொலை அரங்கேறியுள்ளது. சென்னையில் பெருங்குடி குப்பைக் கிடங்கில் துண்டிக்கப்பட்ட கை, கால்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் கடந்த 6ம் ‌தேதி துப்பு துலங்கியது.

சந்தியாவின் மரணம்

துணை நடிகை சந்தியா... அவிழ்க்கப்படாத முடிச்சுகள்...

ஆனால் சந்தியாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. கிறிஸ்துமஸ் பண்டிகையை அடுத்து சந்தியா சென்னை சென்று விட்டதாக அவரது பெற்றேரர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். அதன்படி பார்த்தால் அடுத்த 15 நாட்கள் சந்தியா எங்கிருந்தார்?

அவரது செல்போன் என்னவானது? அவரது நண்பர்கள் வட்டாரத்தில் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை? சம்பவம் நடந்த அன்று இரவில் சந்தியா யாரை பார்க்க செல்வதாக இருந்தார். சம்பவம் நடந்த அன்று சந்தியா தனது கணவா் வீட்டில் இருந்த போது, இரவு 10 மணியளவில் அவருக்கு செல்போன் அழைப்பு வந்ததாக கூறப்பட்டது.

அதன் பிறகு தான் கொலை நடந்ததாக தொிவிக்கப்பட்டது. அப்படியெனில் சந்தியாவை செல்போனில் அழைத்தது யாா்? சந்தியாவின் செல்போன் எங்கே? என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இது குறித்து போலீசாா் ஏன் விசாாிக்கவில்லை? என பல கேள்விகள் எழுகின்றது. பாலகிருஷ்ணன் சந்தியாவை கொலை செய்த பிறகு பிரேதத்தை மரம் அறுக்கும் இயந்திரம் மூலம் துண்டுகளாக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது  அந்த இயந்திரத்திலிருந்து சத்தம் வெளியில் கேட்காமலா இருந்துள்ளது?

இந்த சத்தம் வீட்டு உரிமையாளர்களுக்கு கேட்காமல் போனது எ‌ப்படி. மேலும் கொலை செய்ய பயன்பட்ட இயந்திரம் எங்கே போனது. அந்த நள்ளிரவு நேரத்தில் எந்த கடை திறந்திருந்தது பாலகிருஷ்ணன் மரம் அறுக்கும் இயந்திரத்தை எங்கு விலைக்கு வாங்கினாா், என்று பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.

ஒருவரின் உடலை கூறு போட வேண்டுமானால் கொடூரனால் தான் முடியும். கூடவே வாழ்ந்து வந்த கணவனால் மனைவியின் உடலை இயந்திரத்தினால் அறுத்து துண்டு துண்டாகக் கூறு போட இயலுமா. மேலும் அதை பாலிதீன் பைகளில் கட்டி மூலைக்கு மூலை வீசத்தோன்றுமா. கற்பனைக்கு எட்டாததாக உள்ளது இத்தகைய கருத்துகள். மேலும் பாலகிருஷ்ணனோ விசாரணையின் போது சகஜமாக நடந்து கொள்கிறார் என்றும் போலீசாா் தொிவித்துள்ளனா்.

அவிழ்க்கப்படாத முடிச்சுகள்

துணை நடிகை சந்தியா... அவிழ்க்கப்படாத முடிச்சுகள்...

இந்த நிலையில் தான் சந்தியாவின் உடல் பாகங்கள் அவருடைய உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து சந்தியாவின் மரணத்தில் பல்வேறு மா்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படவில்லை.

பாலகிருஷ்ணனுக்கு அரசியல் செல்வாக்கு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தால் பாலகிருஷ்ணன் தான் கொலையாளி என்பதை ரத்த பாிசோதனை மூலம் நிரூபிக்கப்படும் என்று போலீசாா் கூறினாலும், சட்டத்தில் இருக்கும் சில வழிகள் மூலம் குற்றவாளி தப்பிக்க முடியும் என சட்ட நிபுணா்கள் கருதுகின்றனா்.

ஏனெனில் இந்தக் கொலை நடைபெற்றுள்ள குற்றக் காட்சி சித்தரிப்பில் நாம் மேலே கூறியுள்ள விஷயங்களுக்கு இதுவரை சரியானதொரு விளக்கம் விசாரணை அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை என்பது கேள்விக்குரிய விஷயமாக உள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP