மாணவர்கள் ஏட்டுக்கல்வியுடன் வாழ்க்கைக் கல்வியும் கற்க வேண்டும்: முதலமைச்சர்  

மாணவர்கள், ஏட்டுக்கல்வியுடன் வாழ்க்கை கல்வியும் கற்க வேண்டும் என முதலைமைச்சர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
 | 

மாணவர்கள் ஏட்டுக்கல்வியுடன் வாழ்க்கைக் கல்வியும் கற்க வேண்டும்: முதலமைச்சர்  

மாணவர்கள், ஏட்டுக்கல்வியுடன் வாழ்க்கை கல்வியும் கற்க வேண்டும் என முதலைமைச்சர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். 

சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள எம்ஜிஆர் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் முதலமைச்சர் பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற இந்த நாளில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை நினைவு கூர்வதாக தெரிவித்தார்.

டாக்டர் பட்டம் பெற்றுள்ளதால் என்னுடைய பொறுப்புகள் மேலும் அதிகமாகியுள்ளன. மனிதவள துறையில் கவனம் செலுத்தி வருவதால் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. தமிழக அரசு கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்தும் அளித்து வருகிறது. கல்விக்கு என தனி தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.  6 மாவட்ட தலைநகரங்களில் மருத்துவக்கல்லூரி தொடங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

கனிவு, பணிவு, துணிவு போன்ற குணங்கள் மாணவர்களுக்கு தேவை. மாணவர்கள் ஏட்டுக்கல்வியுடன், வாழ்க்கைக் கல்வியும் கற்க வேண்டும். நல்ல புத்தகங்கள், நூல்களையும் மாணவர்கள் படிக்க வேண்டும் என தெரிவித்தார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP