மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்படும் என்று சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
 | 

மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்படும் என்று சென்னை  காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடி விடுதி அறையில் கடந்த சனிக்கிழமை அன்று கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், மாணவியின் தற்கொலை குறித்து சென்னை  காவல் ஆணையர் விஸ்வநாதன் மற்றும் இணை ஆணையர் சுதாகரும் சென்னை ஐஐடி கல்லூரிக்கு சென்று நேரில் விசாரணை நடத்தினார்கள்.

ஐஐடி வளாகத்தில் விசாரணை நடத்தியபின் காவல் ஆணையர் விஸ்வநாதன் செய்தியாளார்களுக்கு அளித்த பேட்டியில், ‘ ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்படும். சிபிஐயில் பணிபுரிந்த கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் விசாரணைக்குழு செயல்படும். விசாரணை அதிகாரியாக கூடுதல் துணை ஆணையர் மெகலினா செயல்படுவார்’ என்று காவல் ஆணையர் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP