புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு உயர் ரக மரக்கன்றுகள் வழங்க நடவடிக்கை : அமைச்சர் தங்கமணி

புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு உயர் ரக தென்னை மரக்கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கூடுதல் நிவாரண நிதி கேட்டு மத்திய அரசிடம் போராடுவோம் எனவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
 | 

புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு உயர் ரக மரக்கன்றுகள் வழங்க நடவடிக்கை : அமைச்சர் தங்கமணி

புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு உயர் ரக தென்னை மரக்கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, "கஜா புயல் பாதித்த திருவாரூர் மாவட்டத்தில் 2,676 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 2 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். 152 கால்நடை மருத்துவ முகாம்கள் மூலம் 25,504 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு 3 ஆண்டுகளில் காய்க்கும் உயர் ரக தென்னை மரக்கன்றுகள் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 70 சதவீதம் மின்சாரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் கூடுதல் கஜா புயல் நிவாரண நிதி கேட்டு போராடுவோம்" என தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP