தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னை: ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னைக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
 | 

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை :

தண்ணீர் பிரச்னைக்கு 8 ஆண்டுகால அதிமுக அரசின் நிர்வாகச் சீர்குலைவே காரணம். இனியும் தாமதிக்காமல் போர்க்கால அடிப்படையில் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். மீஞ்சூர், நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களில் சுத்திகரிப்பு நடக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும். அதிமுக அரசு அறிவித்த கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன. கூட்டுக் குடிநீர் திட்டம், ஆழ்குழாய் கிணறுகள் உள்ளிட்ட குடிநீர் திட்டப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். சென்னை மாநகர மக்களுக்கு காலதாமதமின்றி குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP