ஸ்டாலின் ஒரே நிலைப்பாட்டில் தான் இருக்கிறார்: திருநாவுக்கரசர்

காஷ்மீர் விவகாரத்தில் ஸ்டாலின் ஒரே நிலைப்பாட்டில் தான் இருக்கிறார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
 | 

ஸ்டாலின் ஒரே நிலைப்பாட்டில் தான் இருக்கிறார்: திருநாவுக்கரசர்

காஷ்மீர் விவகாரத்தில் ஸ்டாலின் ஒரே நிலைப்பாட்டில் தான் இருக்கிறார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ஜம்மு-காஷ்மீரில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டது கண்டனத்திற்குரியது. இதன் மூலம் காஷ்மீரில் அசாதாரண சூழ்நிலையை நிலவி வருவது உறுதியாகிறது. 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட விதம் தவறானது. ப.சிதம்பரம் கைதுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் ஒன்றுசேர்ந்து போராட்டத்தை முன்வைத்து எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். காங்கிரஸ் தலைவர்களை பழிவாங்கும் நோக்கத்தோடு பாஜக செயல்பட்டு வருகிறது. இதற்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சமாட்டோம். எதிர்த்து நின்று வெற்றி பெறுவோம்.

தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு தான், காங்கிரஸ் தலைவர்கள் யாரும் பாஜக அரசின் திட்டங்களை ஆதரிக்க வேண்டாம் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இதில், வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது.

காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களை நீக்கும் அதிகாரம் கட்சி தலைமைக்கு மட்டுமே உள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் ஸ்டாலின் இரட்டை நிலைப்பாட்டில் இருப்பதாக கூறுகின்றனர். அவர் சரியாக ஒரே நிலைப்பாட்டில் தான் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP