'தங்கமகள்' கோமதிக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகையை வழங்கினார் ஸ்டாலின்!

ஆசிய தடகளப் போட்டியில், தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் பரிசுத்தொகையை இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து வழங்கினார்.
 | 

கத்தார் தலைநகர் தோஹாவில் 23வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் கடந்த வாரம் நடைபெற்றது. இதில், தடகளப்  போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், திருச்சியைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்று சாதனை படைத்தார். 

வீராங்கனை கோமதியின் சாதனைக்கு பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வீராங்கனை  கோமதிக்கு திமுக சார்பில் அவருக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது. அதனை இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து கோமதியிடம் நேரடியாக வழங்கினார். 

அதேபோன்று வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் ஆரோக்கிய ராஜுக்கும் திமுக சார்பில் ரூ.5 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP