திமுகவை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது, கருணாநிதி, ஜெயலலிதாவின் வெற்றிடங்களை ஸ்டாலினால் மட்டுமே நிரப்ப முடியும்

திமுகவை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது; திமுகவை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போயுள்ளார்கள் என்று, கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் இன்று நடைபெற்ற திமுகவின் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
 | 

மேலும், ஹைட்ரோகார்பான் திட்டத்தை கைவிடவில்லை எனில் டெல்டா மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றும், அதிமுக ஆட்சி முடிந்தாலும் ஊழல் செய்தவர்கள் ஓடி ஒளிய முடியாது என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதே கூட்டத்தில் பேசிய திருமாவளவன், ‘கருணாநிதி, ஜெயலலிதாவின் வெற்றிடங்களை ஸ்டாலினால் மட்டுமே நிரப்ப முடியும். ஜெயலலிதா வெற்றிடத்தை ஸ்டாலினால் நிரப்பமுடியும் என்பதால்தான் செந்தில்பாலாஜி, தங்கதமிழ்ச்செல்வன் திமுகவிற்கு வந்தனர். எதிரி வெற்றி பெற்றுவிடக்கூடாது என்ற நோக்கில் திமுக சின்னத்தில் விசிக போட்டியிட்டது' என்றார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP