இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்றும் நாளையும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கலுக்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
 | 

இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்றும் நாளையும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. 

வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களின் பெயர்களை சேர்க்க தமிழகம் முழுவதும் நடப்பு மாதம்  23 மற்றும் 24 ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இன்றும், நாளையும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. 

இந்த முகாமில் வாக்காளர்களின் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் மற்றும் முகவரி திருத்தம் உள்ளிட்ட தேவையான படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம். இந்த சிறப்பு முகாமானது மக்களவை தேர்தலுக்கு முன்பாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வழங்கப்படும் கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தமிழகத்தில் தற்போது 5 கோடியே 91 லட்சத்து 23 ஆயிரத்து 197 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் 2,92,56,960 பேரும், பெண்கள் 2,98,60,765 பேரும், இதர பிரிவினர் 5,472 பேர் அடங்குவர். மேலும் வாக்காளர் பட்டியலில் வெளிநாடுவாழ் வாக்காளர்கள் 97 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP