Logo

கோவையில் வருகிற 29ம் தேதி அறிவியல் கண்காட்சி!

கோவை மாவட்ட சிறு தொழில் சங்கத்தின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தை ஒட்டி நடைபெற உள்ள அறிவியல் கண்காட்சி வரும் 29ஆம் தேதி தொடங்குகிறது.
 | 

கோவையில் வருகிற 29ம்  தேதி அறிவியல் கண்காட்சி!

கோவை மாவட்ட சிறு தொழில் சங்கத்தின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தை  ஒட்டி நடைபெற உள்ள அறிவியல் கண்காட்சி வரும் 29ஆம் தேதி தொடங்குகிறது.

கொடிசியா எனும் கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் தனது பொன்விழா ஆண்டை கொண்டாடுகிறது. இக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவும், தொழில் முனைவோர் மேம்பாட்டு செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாகவும் இந்த நேஷனல் சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி கண்காட்சி வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி கொடிசியாவில் நடத்தப்பட உள்ளது.

எட்டாம் வகுப்பு தொடங்கி உயர்கல்வி பயிலும் மாணவர்களின் அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்துவது இக்கண்காட்சியின் முக்கிய நோக்கமாகும். இக்கண்காட்சியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து சுமார் 160 பள்ளி மற்றும் கல்லூரிகள் பங்கு பெறுகின்றன. இக்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 1,200 மாணவர்களின் கண்டுபிடிப்புகளும் இடம் பெற உள்ளன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP