பள்ளி மாணவி பூங்காவில் கற்பழிப்பு! தலைமறைவாக இருந்தவர் கைது!

கோவையில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த மொத்த நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 | 

பள்ளி மாணவி பூங்காவில் கற்பழிப்பு! தலைமறைவாக இருந்தவர் கைது!

கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பினை மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவி தனது பிறந்தநாள் அன்று காதலனுடன் ஒரு பூங்காவிற்கு சென்று உள்ளார். அங்கு 6 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது. அப்போது காதலனை சகட்டுமேனிக்கு அடித்துவிட்டு மாணவியை புதருக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். 

இதுதொடர்பாக மாணவி தனது பெற்றோரிடம் தகவல் தெரிவிக்க பின்பு ஆர்எஸ் புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரை விசாரித்த போலீஸ் நாராயணன் ராகுல் கார்த்திக் மற்றும் பிரகாஷ் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தது, இரண்டு பேரை மேலும் தேடி வரும் போலீஸ் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில், இவ்வழக்கில் தேடப்பட்டு மணிகண்டன் கோவை மகளிர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், தற்போது தலைமறைவாக இருந்த கார்த்திக் என்ற பப்ஸ் கார்த்திக்கை ஆர்.எஸ்.புரம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP