நாளை திரையரங்குகளில் காட்சிகள் ரத்து!

நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதால் திரையரங்குகளில் காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 | 

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெறவுள்ளது. திருவிழாவை முன்னிட்டு, மதுரை மக்களவை தொகுதியில் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை தேர்தல் நடைபெற உள்ளது. 

இதையடுத்து, 100% வாக்குப்பதிவை கருத்தில்கொண்டு, திரையரங்குகளில் நாளை காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து  செய்யப்பட்டுள்ளதாக தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP