சர்கார் நடிகர் மீது வழக்கு பதியப்படும்- அமைச்சர் சி.வி. சண்முகம்

சர்கார் படத்தில் அரசியல் நோக்கத்திற்காக சில காட்சிகள் இருப்பதால் ஆலோசனைக்கு பிறகு பட தயாரிப்பாளர், நடிகர் மீது வழக்கு பதியப்படும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
 | 

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் கட்சியினரிடையே பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் நடைபெறவிருக்கும் திருப்போரூர் இடைத்தேர்தல் குறித்த ஆலோசனை சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் சண்முகம், “சர்கார் திரைப்படத்தில்அரசியல் நோக்கத்தை மையமாக கொண்டு சர்ச்சைக்குரிய சில காட்சிகள் இருப்பதால் கட்சியுடனான உயர்மட்ட ஆலோசனைக்கு பிறகு அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் மீது வழக்கு பதிய உள்ளோம். சர்கார் படத்தை திரையிட்ட திரையரங்குகள் மீதும் வழக்கு பதியப்படும்” என எச்சரித்தார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP