சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் ஜோடி...ஒரு திருடியாம்...!

சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகை ஒரு காலத்தில் திருடி மாட்டிகொண்டு அசிங்கப்பட்டுள்ளாராம்.
 | 

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் ஜோடி...ஒரு திருடியாம்...!

சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகை ஒரு காலத்தில் திருடி மாட்டிகொண்டு அசிங்கப்பட்டுள்ளாராம்.

சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் கடந்த ஞாயிற்றுகிழழை ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இப்படத்தை  இரட்டை இயக்குனர்களான ஜேடி-ஜெர்ரி இயக்குகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இப்படத்தில் சரவணன் அண்ணாச்சிக்கு ஹீரோயினாக யார் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கீதிகா திவாரி என்ற மாடல் நடிக்கவுள்ளார் என்று தெரியவந்தது.

யார் இந்த கீதிகா திவாரி என்று தேடிப்பார்த்தால், இதற்கு முன்பு இவரின் பெயர் கீதா தியாகியாம். கடந்த 2004ஆம் ஆண்டில் இந்த கீதா தியாகி செய்தி சேனலில் வேலை பார்த்துகொண்டிருந்தார். அப்போது ஒருநாள் தனது தோழி ஷாஜியா இல்மியின் ஏடிஎம் கார்டை கீதா தியாகி திருடி பணம் எடுத்துள்ளார். ஷாஜியா இல்மி தற்போது ஆம் ஆத்மி தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கீதா தியாகி தான் தனது ஏடிஎம் கார்டை திருடியுள்ளார் என்று தெரிந்ததும், ஷாஜியா இல்மி, இந்த திருட்டு தொடர்பாக மூத்த நிர்வாகியுடம் புகார் அளித்துள்ளார். ஆனால், அவரோ கீதா தியாகி மீது உள்ள மயக்கத்தால் கண்டுகொள்ளவில்லை. பின்னர் சிசிடிவி கேமரா மூலம் கீதா தியாகி தான் திருடி என தெரியவந்ததை தொடர்ந்து, வேலையில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

இதன்பின்னர் மாடல், நடிகை என வலம்வந்த அவர் திருடி மாட்டிகொண்டதை மறைக்க தனது பெயரை கீதிகா திவாரி என்று மாற்றிக்கொண்டார். நடிகையாக இருந்தபோது 2012இல் இயக்குனர் சுபாஷ் கபூர் மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக மீடுவில் குற்றம்சாட்டியுள்ளார் இந்த கீதிகா திவாரி. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP