மதத்தால் யாருடைய மனதையும் புண்படுத்தக்கூடாது: பிரேமலதா விஜயகாந்த்

மதத்தின் பெயரால் யாருடைய மனதையும் யாரும் புண்படுத்த கூடாது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
 | 

மதத்தால் யாருடைய மனதையும் புண்படுத்தக்கூடாது: பிரேமலதா விஜயகாந்த்

மதத்தின் பெயரால் யாருடைய மனதையும் யாரும் புண்படுத்த கூடாது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து தான் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், "பிறப்பால் கமலும் ஒரு இந்து தான், கமல் கூறிய கருத்து பிறருடைய மனதை புண்படுத்தும் வகையில் இருக்கிறது. அது தவறானது. யாரும் மதத்தால் யாருடைய மனதையும் புண்படுத்தக்கூடாது. இது அனைத்து மதத்திற்குமே பொருந்தும்" என கூறியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP