தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை

நாமக்கல், கோவை,பெரம்பலூர் மாவட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
 | 

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை

நாமக்கல், கோவை,பெரம்பலூர் மாவட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் குலசேகரம், குழித்துறை, கோதையாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, பகுதிகளிலும், கோவை மாவட்டத்தில் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளான புதுப்பாளையம், பட்டணம் பகுதிகளிலும், பெரம்பலூர் மாவட்டத்தில் எசனை, வேப்பந்தட்டை, பாலையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. மேலும், அரியலூர் நகர், வாலாஜா நகரம், சிறுகளத்தூர் ஆகிய பகுதிகளிலும், கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP