இன்னும் 12 மணி நேரம் ஆகும்: ராதாகிருஷ்ணன் தகவல் 

குழி தோண்டும் பணி நிறைவடைய இன்னும் 12 மணி நேரம் ஆகும் என்று வருவாய் நிர்வாக ஆனையர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
 | 

இன்னும் 12 மணி நேரம் ஆகும்: ராதாகிருஷ்ணன் தகவல் 

குழி தோண்டும் பணி நிறைவடைய இன்னும் 12 மணி நேரம் ஆகும் என்று வருவாய் நிர்வாக ஆனையர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக  வருவாய் நிர்வாக ஆனையர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியி , ‘ரிக் இயந்திரம் மூலம் 50 அடியிலிருந்து 55 அடி வரை எட்டுவதே சவாலாக உள்ளது. கடுமையான பாறைகள் இருப்பதால் ரிக் எந்திரத்தில் தோண்டுவது சிரமமாக உள்ளது. ரிக் இயந்திரம் மூலம் 98 அடிக்கு குழி தோண்டவே மேலும் 12 மணி நேரம் ஆகும். 98 அடிக்கு குழி தோண்டிய பின் பக்கவாட்டில் சுரங்கம் அமைக்கப்படும். பக்கவாட்டில் சுரங்கம் தோண்ட என்எல்சி வல்லுநர்கள் தயாராக உள்ளனர்’ என்றார்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 74 மணி நேரத்தை கடந்துள்ளது. மழை, மண்சரிவு, இயந்திர பழுது ஆகியவற்றை கடந்து மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP