சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்க வேண்டும்: அமைச்சர்

வேகமாக அழிந்துவரும் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
 | 

சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்க வேண்டும்: அமைச்சர்

வேகமாக அழிந்துவரும் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். 

சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் நடைபெற்ற வன உயிரின வார நிறைவு விழாவில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ' கடல் அரிப்பை தடுக்க அலையாத்திக்காடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கூறினார். கடலில் மீன் பிடிப்பதை ஒழுங்குபடுத்த கடல் சார் அமலாக்கப் பிரிவு உருவாக்கப்படும் என்றும், சுருக்குமடி உள்ளிட்ட வலைகளை பயன்படுத்தி மீன் இனத்தை அழிக்கும் செயல் தடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

வன உயிரினங்களால் தாக்கப்பட்டு உயிரிழக்கும் வன அலுவலர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அனைவரும் முடிந்த அளவுக்கு மரங்களை வளர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், உலகம் தோன்றிய காலத்தில் பூமியில் இருந்த மரங்களுக்கு ஈடாக வளர்க்க வேண்டும் என்றும் மரங்கள் அதிகமாக இருந்தால் தான் வன உயிரினங்கள் காப்பாற்றப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், 2011 முதல் தற்போது வரை தமிழகத்தில் 4.65 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.  

கிண்டி சிறுவர் பூங்காவுக்கு Mini zoo என்ற அங்கீகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளதாகவும், சிறுவர் பூங்கா நடுத்தர உயிரியல் பூங்காவாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP