ஏழை மக்கள் யாரும் தினமும் பெட்ரோலை பயன்படுத்தமாட்டார்கள்!

பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரி ஏழை மக்களுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அதிமுக மாநிலங்களவை நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 | 

ஏழை மக்கள் யாரும் தினமும் பெட்ரோலை பயன்படுத்தமாட்டார்கள்!

பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரி ஏழை மக்களுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அதிமுக மாநிலங்களவை  நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இன்று பட்ஜெட்டை தாக்கல் உரையாற்றிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோல் மற்றும் டீசல் மீது லிட்டருக்கு ரூ.1 கூடுதல் வரி வசூலிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இதுதொடர்பாக அதிமுக மாநிலங்களவை நவநீதகிருஷ்ணன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரி ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஏழை மக்கள் யாரும் தினமும் பெட்ரோல், டீசலை பயன்படுத்தமாட்டார்கள்’ என்று கருத்து கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP