ஃபாஸ்ட் டேக் மூலம் திருடப்பட்ட காரை கண்டுபிடித்த போலீஸ்!

டிசம்பர் 15ம் தேதி மூலம் 523 சுங்கச்சாவடிகளில் ஃபாஷ்ட் டேக் கட்டண சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பிட்ட தொகையை இணையம் மூலம் செலுத்திவிட்டால் சுங்கச்சாவடியை கடக்கும் போது ஃபாஷ்டேக் அட்டையில் இருந்து பணம் பெற்றுக் கொள்ளப்படும்.
 | 

ஒவ்வொரு முறையும் உங்கள் ஃபாஷ்ட் டேக் கணக்கில் இருந்து பணத்தைப் பெறும் பொழுது  உங்கள் எண்ணிற்கு குறுஞ்செய்தி வரும். இந்தக் குறுஞ்செய்தியில் எவ்வளவு பணம் எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் உங்கள் ஃபாஸ்ட் டேக் கணக்கில் எவ்வளவு மீதம் இருக்கிறது ஆகியவை இடம்பெற்றிருக்கும். 

இந்த ஃபாஸ்ட் டேக் கார்டின் மூலமாக தொலைந்து போன காரை போலிசார் கண்டுபிடித்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. 
புனே பகுதியை கர்வ் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திர ஜாக்டேப். இவர் தன்னுடைய ஸ்கார்பியோ காரை வாசலில் பார்க் செய்திருந்தார். இந்நிலையில் அதிகாலை 4.30க்கு  ஃபாஸ்ட் டேக் கணக்கில் இருந்து ரூ.35 எடுக்கப்பட்டதாக அவருடைய செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. ஆனால்  ராஜேந்திர ஜாக்டேப் தூக்கத்தில் இருந்ததால் இந்த மெசேஜை கவனிக்கவில்லை. 

ஃபாஸ்ட் டேக் மூலம் திருடப்பட்ட காரை கண்டுபிடித்த போலீஸ்!

மீண்டும் காலை 5.50 மணிக்கு ஃபாஸ்ட் டேக் கணக்கில் இருந்து ரூ.35 எடுக்கப்பட்டுள்ளதாக அவருடைய போனுக்கு மெசேஜ் வந்துள்ளது. இந்த முறை பன்வேல் சுங்கச் சாவடியிலிருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த முறை சுதாரித்துக் கொண்ட ஜாக்டேப்  வீட்டில் இருக்கும் காருக்கு எப்படி சுங்கச் சாவடிகளில் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது. வெளியில் சென்று பார்த்த போது அவருடைய கார் காணமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக காவல்நிலையத்திற்கு சென்று கார் காணாமல் போனதுக் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதுமட்டுமில்லாமல் ஜிபிஎஸ் வசதியையும்  அவருடைய காரில் பொருத்தப்பட்டிருக்கிறது. ஃபாஷ்ட் டேக் மற்றும் ஜிபிஎஸ் உதவியுடன் கார் சென்றுக் கொண்டிருக்கும் பாதையை கண்டுபிடித்து அருகிலிருக்கும் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஃபாஸ்ட் டேக் மூலம் திருடப்பட்ட காரை கண்டுபிடித்த போலீஸ்!

தானே பகுதியுடன் காரில் இருந்த  ஜிபிஎஸை திருடர்கள் துண்டித்துவிட்டனர். இதனால் காரை மீட்பதில் சற்று பின்னடைவு ஏற்பட்டது. தொடர்ந்து நடந்த போலிசாரின் தேடுதல் வேட்டையில் கார் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் காரைத் திருடிச் சென்றவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP