Logo

வாக்கு எண்ணிக்கையின் போது 17சி படிவம், பென்சில் எடுத்து செல்ல அனுமதி: ஆர்.எஸ்.பாரதி

வாக்கு எண்ணிக்கையின் போது 17சி படிவம் மற்றும் பென்சில் எடுத்து செல்ல தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
 | 

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வாக்குச்சாவடி முகவர்கள் பேப்பர், பேனா மற்றும் 17சி படிவம் போன்றவற்றை எடுத்து செல்லக்கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில், அதனால் உள்ள சிரமங்களை எடுத்து கூறியதையடுத்து 17சி படிவம் மற்றும் பென்சில் எடுத்து செல்ல தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளதாக தெரிவித்தார். 

வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு ஒவ்வொரு மேஜையிலும் எவ்வளவு வாக்கு பதிவாகியுள்ளது என்பது குறித்த தகவல்களை வாக்குச்சாவடி முகவர்களுக்கு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளதாகவும், விவிபேட் எண்ணிக்கையின் போது அரசியல் கட்சிகளின் தனி ஏஜெண்டுகளையும் அனுமதிக்க ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். 

அரவக்குறிச்சி வாக்கு எண்ணும் மையத்தில் போதிய இட வசதி இல்லை என்பதை சுட்டிகாட்டிய அவர், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதை எடுத்து கூறியதையடுத்து, பெரிய அறை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், திமுகவின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு நடவடிக்கை மேற்கொண்டதற்கு தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP