’இயற்கை உணவுகளுக்கு மக்கள் மாற வேண்டும்; வெளிநாட்டு குளிர்பானங்களை குடிக்காதீர்கள்’

முன்னோர்கள் விட்டுச் சென்ற பாரம்பரிய இயற்கை உணவுகளுக்கு மக்கள் மாற வேண்டும் என்று, சென்னையில் உணவு திருவிழாவை திறந்துவைத்த பின் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
 | 

மேலும், பாரம்பரிய உணவுகளை தவிர்ப்பதால் உடலில் நோய்கள் வருகின்றன. பாரம்பரிய உணவுகளுடன் உடற்பயிற்சியும் அனைவருக்கும் அவசியம். பிரதமர் நரேந்திர மோடியின் பிட் இந்தியா இயக்கம் மக்களின் உடல் நலனை பேண உதவும். கம்பு, கேழ்வரகு, சாமை போன்ற தானியங்களை மீண்டும் உணவில் பயன்படுத்த வேண்டும்’ என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

முன்னதாக பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வெளிநாட்டு குளிர்பானங்களை பொதுமக்கள் தவிரிக்க வேண்டும் என்றும், இயற்கை பானங்களான இளநீர், மோர் உள்ளிட்டவைகளை மக்கள் பருக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

 newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP