'சர்கார்' பட பாணியில் வாக்களித்த நெல்லை இளைஞர்!

'சர்கார்' படத்தில் விஜய்க்கு நடந்தது போன்று நெல்லையில் இளைஞர் ஒருவருக்கு சுவாரசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்த இளைஞரின் ஓட்டை, கள்ள ஓட்டு போட்டதையடுத்து, அவருக்கு 49-P தேர்தல் விதிப்படி வாக்களிக்க தேர்தல் அதிகாரி அனுமதி வழங்கியுள்ளார்.
 | 

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகி வெற்றி கண்ட திரைப்படம் 'சர்கார்'. இந்த படத்தில் 'ஒருவரது ஓட்டை, மற்றொருவர் கள்ள ஓட்டு போட்டுவிட்டால், 49-P என்ற தேர்தல் விதிமுறைப்படி வாக்களிக்கலாம்' என்பதை மையமாக வைத்து அரசியல் சார்ந்த ஒரு படமாக உருவாக்கப்பட்டது. மேலும், வாக்களிப்பதன் அவசியத்தையும், 'ஒரு விரல் புரட்சி' என்ற பாடலின் மூலம் காட்டியிருப்பார்கள். 

'சர்கார்' பட பாணியில் வாக்களித்த நெல்லை இளைஞர்!

அந்த வகையில், நேற்று தேர்தலில் வாக்களித்த இளைஞர்கள், விரல் மையுடன் போட்டோ எடுத்து 'ஒரு விரல் புரட்சி' என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ட்ரெண்டாக்கினர். 

மேலும், இந்த படத்தில் விஜய்க்கு நடந்தது போன்று நெல்லையில் ஒரு சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. நெல்லை மாவட்டம் பணகுடி வாக்கு சாவடி எண் 48-ல் மணிகண்டன் என்பவரது ஓட்டை, மற்றொருவர் கள்ள ஓட்டு போட்டதையடுத்து, அவருக்கு 49-P தேர்தல் விதிப்படி வாக்களிக்க தேர்தல் அதிகாரி அனுமதி வழங்கியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP