காவிரியில் 31.24 டி.எம்.சி தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும்: தமிழக அரசு

காவிரியில் 31.24 டி.எம்.சி தண்ணீர் திறக்க கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது-
 | 

காவிரியில் 31.24 டி.எம்.சி தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும்: தமிழக அரசு

காவிரியில் 31.24 டி.எம்.சி தண்ணீர் திறக்க கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. 

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4 வது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.  இதில்  ஜூலை மாதத்திற்கு 31.24 டி.எம்.சி தண்ணீர் காவிரியில் திறந்துவிட கார்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது. மேலும், கடந்த மாதத்திற்குரிய  9.19 டிஎம்.சி தண்ணீரும் இதுவரை திறந்துவிடப்படவில்லை என்பதால், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கமுடியவில்லை.

இதனால், குறுவை சாகுபடி விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஜூன், ஜூலை மாதத்திற்குரிய நீரை கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தியது. கூட்டத்தில் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவது தொடர்பாக விவாதம் மேற்கொள்ள தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. 

மேலும, காவிரி நீர் முறைப்படுத்தும்  குழுவின் தலைமையிடம் பெங்களூர் என இருக்கும்பட்சத்தில், கூட்டத்தை இனி பெங்களூரிலே நடத்த வேண்டும் என்று  தமிழக அரசு வலியுறுத்தியது. 

newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP