கல்வெட்டில் ஓபிஎஸ் மகனின் பெயர் மறைப்பு !

கோவில் கல்வெட்டில் துணை முதலமைச்சரின் மகன் பெயர் எம்.பி என பொறிப்பட்டதால் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து ரவீந்திரநாத் பெயர் மறைக்கப்பட்டுள்ளது.
 | 

கல்வெட்டில் ஓபிஎஸ் மகனின் பெயர் மறைப்பு !

கோவில் கல்வெட்டில் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸின் மகன் பெயருடன் எம்.பி. எனச் சேர்த்து பொறிக்கப்பட்டதால் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து, அவரது பெயர் மறைக்கப்பட்டுள்ளது. 

தேனி மாவட்டம் குச்சனூர் காசி ஸ்ரீ அன்னபூரணி ஆலயத்தில் சீரமைப்பு பணிக்காக நன்கொடை வழங்கியவர்களின் பெயர்கள் கல்வெட்டில் பொறிக்கப்பட்டு ஆலயத்தில் பதிக்கப்பட்டுள்ளது. அதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரின் பெயருக்கு முன்பு பாராளுமன்ற உறுப்பினர் (எம்.பி.) என பொறிக்கப்பட்டிருந்தது. 

தேர்தல் முடிவுகள் வெளியாகாத நிலையில், ரவீந்திரநாத் குமார் பெயருக்கு முன்பு பாராளுமன்ற உறுப்பினர் என குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து பலரும் விமர்சித்து வந்த நிலையில், தற்போது ரவீந்திரநாத்தின் பெயர் மற்றொரு கல்வெட்டு கொண்டு முழுவதுமாக மறைக்கப்பட்டுள்ளது. 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP