Logo

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இயல்பான அளவில் பெய்யும்: வானிலை மையம் 

இந்தாண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இயல்பான அளவில் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 | 

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இயல்பான அளவில் பெய்யும்: வானிலை மையம் 

இந்தாண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இயல்பான அளவில் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வனிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘தமிழகத்தில் செப்டம்பரில் இயல்பை விட அதிகமாக மழை பெய்துள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் மாதம் இயல்பு அளவான 10 செ.மீ., காட்டிலும் அதிகமாக 16 செ.மீ., மழை பெய்துள்ளது. இந்தாண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இயல்பான அளவில் பெய்யும். சென்னையில் ஜூன் 1 ஆம் தேதி முதல் தற்போது வரை 59 செ.மீ., மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 39% அதிகமாகும். தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி தென்மேற்கு பருவமழை தொடர்க்கூடிய சூழ்நிலை காணப்படுகிறது. அக்டோபர் இரண்டாவது வாரம் வரை தென்மேற்கு பருவமழை இருக்கும்; அக்டோபர் 20ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குவது இயல்பானது’ என்று அவர் கூறியுள்ளார்.
 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP