எந்த மாநிலத்திலும் ஹிந்தியை திணிக்க முடியாது - ரஜினிகாந்த்

தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் எந்த மாநிலத்திலும் ஹிந்தியை திணிக்க முடியாது என நடிகர் ரஜினிகாந்த் கருத்துத் தெரிவித்துள்ளார்.
 | 

எந்த மாநிலத்திலும் ஹிந்தியை திணிக்க முடியாது - ரஜினிகாந்த்

தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் எந்த மாநிலத்திலும் ஹிந்தியை திணிக்க முடியாது என நடிகர் ரஜினிகாந்த் கருத்துத் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களிடம் உரையாடிய நடிகர் ரஜினிகாந்த், " எந்த நாடாக இருந்தாலும் பொதுவான ஒரு மொழி இருந்தால் தான் அது அந்த நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதாக அமையும் . எனினும் துரதிஷ்டவசமாக நம் நாட்டில் அப்படிக் கொண்டு வர முடியாது. தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் எந்த மாநிலத்திலும் ஹிந்தியை திணிக்க முடியாது" என்ற தன் கருத்தை முன் வைத்துள்ளார்.

“நம் நாட்டில் அரசு அங்கீகரித்த மொழிகளாக 129 மொழிகள் உள்ளன. அதுமட்டுமின்றி ஏராளமான உள்ளூர் வட்டார வழக்குகளும் இருந்து வருகின்றன. இந்நிலையில் நாம் அனைவரும் அவரவர் தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி நம்மிடம் ஆங்கிலம் கலக்காம்ல பேச இயலாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். இது நம்மைப்போன்ற தொன்மையான மொழிகளைக் கொண்ட தேசத்துக்கும், அதன் மக்களாகிய நமக்கும் பெருமைக்குரிய ஒன்றல்ல.. 

அதுமட்டுமின்றி அரசின் அலுவல் மொழியாகவும், மக்களை இணைக்கும் மொழியாகவும் ஹிந்தி மொழி திகழ்ந்து வருகிறது. அதை நாம் அனைவரும் கற்பதற்கு முயற்சிக்க வேண்டும். ஆங்கிலம் என்பது அந்நிய மொழி என்பதை நாட்டு மக்களாகிய நாம் உணர வேண்டும்” என ஆண்டு தோறும் மத்திய அரசின் அனுசரிக்கப்படும் ஹிந்தி திவஸ் தினத்தன்று பாரதிய ஜனதா கட்சித் தலைவரும், உள்துறை அமைச்சருமாகிய அமித் ஷா அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிந்திருந்தார். 

அதில் உள்ள மொத்த விஷயத்தையும் கருத்தில் எடுத்துக்கொள்ளமல்,"ஹிந்தி  மொழியை நாம் அனைவரும் கற்பிப்பதற்கு முயற்சிக்க வேண்டும் என்ற செய்தியை மட்டும் தனித்து எடுத்து தமிழ் ஊடக அறிஞர்களும், தலைவர்கள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்பவர்களும் அமித் ஷாவுக்வுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கருத்து கூறி வந்தனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தும் அமித்ஷாவின் முழு கருத்தையும் வாசித்து அறியாமல் கருத்து கூறியுள்ளது நமக்கு வியப்பைத் தருகிறது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP