ஹெல்மெட் அணியவில்லை என்றால் பெட்ரோல் கிடையாது!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் சென்றால், பெட்ரோல் பங்குகளில் அவர்களுக்கு பெட்ரோல் வழக்கப்படமாட்டாது என்ற புதிய நடைமுறை வருகிற ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
 | 

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை திருச்செந்தூர் உட்கோட்ட பிரிவு மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இணைந்து, விபத்துகளை குறைக்கும் முயற்சியாக திருச்செந்தூர் பகுதியில் ஒரு புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது. அதன்படி, ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு, பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் வழக்கப்படமாட்டாது.  இந்த நடைமுறை வருகிற ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இதையடுத்து, அந்த பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

ஹெல்மெட் அணியாமல் வந்து பெட்ரோல் போடும்படி யாரேனும் பிரச்னை செய்தால் காவல்துறையில் தெரிவிக்கும்படி, பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் முரளி ரம்பா அறிவுறுத்தியுள்ளார். 

தொடர்ந்து திருச்செந்தூர் பகுதியில் இது வெற்றியடையும் பட்சத்தில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP