மீண்டும் மோடி; வேண்டும் மோடி - தமிழிசை ஆவேச பேச்சு!

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும், 'மீண்டும் மோடி; வேண்டும் மோடி' என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மதுரையில் நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் ஆவேசமாக பேசியுள்ளார்.
 | 

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவையடுத்து, பிரதமர் மோடி மதுரை பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். அவரை வரவேற்று பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், "விரைவில் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும். தமிழகத்தில் தாமரை மலருமா? என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு சொல்கிறேன். இங்கே எவ்வளவு தாமரைகள் மலர்ந்திருக்கின்றன பாருங்கள் என்று . 

லட்சக்கணக்கான தாமரைகளை கண்டவுடன் சூரியனே மறைந்துவிட்டது. உதய சூரியன் எங்களை என்ன செய்ய முடியும்?

நமது தலைவர் பிரதமர் மோடி இங்கு வருகை தந்துள்ளார். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அவரை வெற்றி பெற வைத்து மீண்டும் ஆட்சியில் அமர்த்தி அவருக்கு நமது வெற்றியை பரிசளிப்போம். பாரதம் தழைத்தோங்க "மீண்டும் மோடி; வேண்டும் மோடி" என்று முழக்கமிடுவோம். யார் தடுத்தாலும் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்" என்று ஆவேசமாக பேசினார். 

இதையடுத்து பிரதமர் மோடி பாஜக பொதுக்கூட்டத்தில் பேசி வருகிறார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP