சபாநாயகரின் நோட்டீஸுக்கு எதிராக, எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராகவும், தங்களை தகுதி நீக்கம் செய்ய தடை கோரியும், 2 எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
 | 

சபாநாயகரின் நோட்டீஸுக்கு எதிராக, எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராகவும், தங்களை தகுதி நீக்கம் செய்ய தடை கோரியும், 2 எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 

அதிமுக கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களான, விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ பிரபு, அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ ரத்தின சபாபதி ஆகியோரை தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகர் தனபாலிடம், அரசு கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் 3 எம்.எல்.ஏக்களுக்கும் சபாநாயகர், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

அவர்களில் விருத்தாசலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தின சபாபதி ஆகிய இருவரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துளளனர். சபாநாயகர் தனபாலுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதால், எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் அவருக்கு இல்லை என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மூன்று எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக அளித்துள்ள மனு மீதான விசாரணை, வருகிற திங்கட்கிழமை நடைபெற உள்ளது. எம்.எல்.ஏக்கள் தொடர்ந்துள்ள வழக்கும் இத்துடன் சேர்த்து விசாரிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று கூறப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP