எம்.ஜி.ஆர் பிறந்தநாள்: முதலமைச்சர் மலர் தூவி மரியாதை...!

எம்.ஜி.ஆர்-ன் 102வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் முழுவுருவ சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர், அமைச்சர்கள், நிர்வாகிகள் என பலர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
 | 

எம்.ஜி.ஆர். சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி  மரியாதை!

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும்  உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.  எம்.ஜி.ஆர்-ன் 103வது பிறந்த நாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் முழுவுருவ சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஜெயலலிதா சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

எம்ஜிஆரின் பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் ஒருபகுதியாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர். 

newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP