புஷ்கரத்திற்கு மட்டுமல்ல அல்வாவுக்கும் அலைமோதும் கூட்டம்

பிரபலமான திருநெல்வேலி இருட்டுகடையில் அல்வா வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. மகா புஷ்கரத்திற்கு வரும் மக்கள் க்யூவில் நின்று அல்வா வாங்கி செல்கின்றனர்.
 | 

திருநெல்வேலி மாவட்டத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மஹா புஷ்கரம் விழா தாமிரபரணி நதிக்கரையில் நடைபெற்று வருகின்றது. இவ்விழாவில் பங்கேற்க தமிழக மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மக்கள் வந்துகொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில், திருநெல்வேலியின் பிரபலமான இருட்டுகடை அல்வா வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. சாதாரணமாக பரபரப்புடன் காணப்படும் இக்கடையில், மஹா புஷ்கரத்துக்கு வருகை தரும் அதிகளவு மக்களும் தேங்கியதால் அங்கு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருநெல்வேலி சென்றுவிட்டு அல்வா வாங்காமலயா? என்றும் நெல்லை வந்ததற்கு அல்வாவும் ஒரு காரணம் என்றும் அல்வா பிரியர்கள் கூறி செல்கின்றனர்.
 
Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP