மருத்துவப் படிப்பு: பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கியது

மருத்துவப் படிப்புகளில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. இதனை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
 | 

மருத்துவப் படிப்பு: பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கியது

மருத்துவப் படிப்புகளில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. 

சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடைபெற்று வரும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இன்று நடைபெறும் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வில், நீட்தேர்வில் 685 முதல் 610 வரையான மதிப்பெண் பெற்ற 103 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். 

சிறப்புப் பிரிவில் காலியாக உள்ள இடங்களும் பொது பிரிவினருக்கு மாற்றப்பட்டு கலந்தாய்வு நடைபெறுகிறது. மருத்துவப்படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP