மஞ்சளாறு அணை, பெருஞ்சாணி அணை நிரம்பியது: வெள்ள அபாய எச்சரிக்கை 

தேனி மாவட்டம் மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 51 அடியை எட்டியதால் ஆற்றங்கரையோர பகுதிகளான கல்லுப்பட்டி, வத்தலகுண்டு, கெங்குவார்பட்டியில் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 | 

மஞ்சளாறு அணை, பெருஞ்சாணி அணை நிரம்பியது: வெள்ள அபாய எச்சரிக்கை 

தேனி மாவட்டம் மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 51 அடியை எட்டியதால் ஆற்றங்கரையோர பகுதிகளான கல்லுப்பட்டி, வத்தலகுண்டு, கெங்குவார்பட்டியில் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மொத்த கொள்ளளவான 57 அடியில் 51 அடியை எட்டிய நிலையில் அணை நீர்வரத்து 478 கனஅடியாக உள்ளது.

இதேபோல், கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை நிரம்பியதால் தாமிரபரணி, பரளியாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ள அபாய அளவான 71 அடியை எட்டியதால் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது. இதனால், தாமிரபரணி, பரளியாறு கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP