Logo

பள்ளத்தில் விழுந்த சிறுமி மீட்பு!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கார் பார்க்கிங் பணிக்கு பள்ளம் தோண்டிய போது ஏற்பட்ட மண் சரிவில், தவறி விழுந்த சிறுமி மீட்கப்பட்டார்.
 | 

பள்ளத்தில் விழுந்த சிறுமி மீட்பு!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கார் பார்க்கிங் பணிக்கு பள்ளம் தோண்டியபோது ஏற்பட்ட மண் சரிவில், தவறி விழுந்த சிறுமி மீட்கப்பட்டார்.

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வடக்கு கோபுரம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மூன்றடுக்கு நவீன வாகன நிறுத்துமிடம் கட்டும் பணி சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தரை தளம் அமைப்பதற்காக 20 அடிக்கு மேலாக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளத்தை ஒட்டி இருக்கக்கூடிய சப்பாணி தெரு பகுதியில் இன்று மாலை 3 மணியளவில் திடீரென மண்சரிவு ஏற்பட்டுள்ளது, அப்போது அந்த வழியாக சென்ற சிறுமி திடீரென தவறி உள்ளே விழுந்தார்,

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனே சிறுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்,

இந்த பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இதேபோன்று மண்சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது,

ஒப்பந்ததாரரின் அலட்சிய போக்கால் முறையான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தாமல் இருப்பதால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக அந்த பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP