வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா: ரூ.ஒரு கோடி நிதி வழங்கியது தி.மு.க

வெள்ளத்தால் பதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு தி.மு.க சார்பில் ரூ. 1 கோடி நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ளது.
 | 

வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா: ரூ.ஒரு கோடி நிதி வழங்கியது தி.மு.க

வெள்ளத்தால் பதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு தி.மு.க சார்பில் ரூ. 1 கோடி நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், வரலாறு காணாத மழை பொழிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எங்கும் வெள்ளம் சூழ்ந்து காட்சியளிக்கும் கேரளாவில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வெள்ளத்தில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல கோடி மதிப்பிலான பொருட்கள் நாசமாகியுள்ளன. 

இந்நிலையில் கேரளாவிற்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அந்த வகையில் தி.மு.க அறக்கட்டளை சார்பில், நிவாரண நிதியாக  ரூ.1 கோடி வழங்கினார் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். மேலும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழ்ந்தவர்களின் குடும்பத்திற்கு தனது இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP