விக்ரம் லேண்டரை இஸ்ரோ முன்பே கண்டுபிடித்துவிட்டது... சிவன் அதிரடி பேட்டி

விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்துவிட்டோம் என்றும் இஸ்ரோ இணையதளத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டிருப்பதாகவும் இஸ்ரோ தலைவர் கே.சிவன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
 | 

விக்ரம் லேண்டரை இஸ்ரோ முன்பே கண்டுபிடித்துவிட்டது... சிவன் அதிரடி பேட்டி

விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்துவிட்டோம் என்றும் இஸ்ரோ இணையதளத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டிருப்பதாகவும் இஸ்ரோ தலைவர் கே.சிவன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

இந்தியா கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய விக்ரம் லேண்டரை விண்ணுக்கு அனுப்பியது. ராக்கெட் சரியான பாதையில் சரியான தொலைவில் சென்ற நிலையில் இறுதி கட்டமாக செப்.7ஆம் தேதி நிலவில் விக்ரம் லேண்டரை தரையிறக்கும் போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பெரும் முயற்சியில் இவ்வாறு நடந்தது இஸ்ரோ விஞ்ஞானிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது. மேலும், விக்ரம் லேண்டர் இருப்பிடம் குறித்து ஆய்வு செய்து வருவதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது. 

இதனிடையே,  நாசா விக்ரம் லேண்டரை கண்டுபிடித்துள்ளதாக நேற்றைய தினம் ட்விட்டரில் தெரிவித்திருந்தது. சென்னை எஞ்சினியர் சண்முக சுப்ரமணியன் அனுப்பிய மெயில் மற்றும் டிவிட் ஆதாரங்களை வைத்து இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டதாக வெளியான தகவலால் சண்முக சுப்ரமணியன் ஒரே நாளில் பிரபலமானார். 

இந்நிலையில்,  விக்ரம் லேண்டரை இஸ்ரோ முன்பே கண்டுபிடித்து விட்டது என்றும், இது தொடர்பான தகவலை இஸ்ரோவின் இணையதளத்தில் ஏற்கனவே வெளியிட்டுவிட்டோம். இப்போதும் இணைய பக்கத்தில் அந்த தகவல் தேதியுடன் இருக்கிறது. நீங்கள் அதை சோதனை செய்து பார்க்கலாம் என்று இஸ்ரோ தலைவர் கே சிவன் தெரிவித்துள்ளார். மேலும், செப்டம்பர் 10ம் தேதி இது தொடர்பான தகவலை வெளியிட்டபோது, லேண்டரை தொடர்பு கொள்ள முடியாததால் அதை பெரிதாக சொல்லவில்லை என்றவாறு கூறியுள்ளார். 

மேலும், லேண்டரை ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டதால், நாங்கள் சண்முக சுப்ரமணியம் அளித்த புகைப்படங்களை ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டதாகவும், ஆனால் சந்திரயான் 2ன் ஆர்பிட்டர் நன்றாக செயல்பட்டுக் கொண்டு இருப்பதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். 

Newstm.in 


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP