மருத்துவமனை சுவர் இடிந்து மருத்துவர் உள்பட இருவர் பலி

நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் கேண்டீனில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மருத்துவர் உள்பட இருவர் இன்று உயிரிழந்துள்ளனர்.
 | 

மருத்துவமனை சுவர் இடிந்து மருத்துவர் உள்பட இருவர் பலி

நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் கேண்டீனில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மருத்துவர் உள்பட இருவர் இன்று உயிரிழந்துள்ளனர். நாமக்கல் தங்கம் மருத்துவமனை கேன்டீன் வளாகத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் மருத்துவமனை பெண் மருத்துவர் கலா, ஓட்டுனர் மோகன்ராஜ் ஆகியோர் மருத்துவனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்த  நிலையில் திடீரென கேண்டீன் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP