5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:  வானிலை மையம் 

தமிழகத்தில் நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 | 

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:  வானிலை மையம் 

தமிழகத்தில் நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  ‘வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக உள்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது’ என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

தற்போது சென்னையில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP